Wednesday, 1 April 2020

ராகு

ராகு - காரகத்துவம் :



* ராகுவை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது என்பதால் தான் கேதுவை வைத்து "பாம்பின் கால் பாம்பறியும்" என்றார்கள்.

 அதிலும் குறிப்பாக ராகு. ஏனென்றால் நடந்து முடிந்த பலன்களை விட இனிமேல் நடக்கப் போகும் பலன்களில் தான் சுவாரஸ்யம் உள்ளது. நடக்கப்போவதை துல்லியமாக கூறும் ஜோதிடர்களுக்கே, பெயர், புகழ் கிடைப்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது.

* கேது flash back என்றால் ராகு flash front. இனி நடக்க போகும் பலன்கள் அனைத்தும் ராகுவின் காரகத்துவமே.

* கேம். அப்படி என்றால் ராகு பாவங்களை செய்ய தூண்டுபவர். ராகு- வாய்ப்பகுதி. கேது- கழிவுநீக்க பகுதி. நாம் சாப்பிடும் போது, நல்லவை கெட்டவை என்று பிரித்துப் பார்க்காமல் சாப்பிடுகிறோம். அதாவது  சத்துணவு அல்லது சத்து இல்லாத உணவு என்று பிரிக்கலாம். சாப்பிட்ட உணவை சத்துணவு மற்றும் கழிவுகள் என்று பிரித்து வெளியே தள்ளுவது கேதுவின் வேலை. எனவேதான் கேதுவை பாவத்தை கழுவுதல் என்று முன்னரே குறிப்பிட்டோம். கேதுவுக்கு நேர் எதிர் ராகு பாவத்தை செய்கிறார் என்று பொருள். அதாவது ராகு வாய் கேது கழிவுகளை வெளித்தள்ளும் உறுப்பு. நாம் சாப்பிடும் பொருளில் சத்துள்ள உணவை கேது உடலில் கிரகித்துக் உடலில் எடுத்து கொண்டால் அது புண்ணியம். வெளி தள்ளினால் அது பாவம். எனவே பாவங்கள் கழிகிறது என்று பொருள்.

* ராகு நமது தாத்தாவிற்கு காரகன். குழந்தை பிறப்பை நிர்ணயிப்பது ஆணின் உயிரணுவில் உள்ள Y குரோமோசோம். நமது தந்தை வழி தாத்தா,  தாத்தாவிற்கு அப்பா என்று ஒரு வரிசையில் நாம் செல்லும்போது,  நமது பிறப்பிற்கு காரணம் ராகுவே என்று புரிந்துவிடும். அதனால்தான் நமது ஆத்மா காரகன் சூரியன் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நீசமாகிறார்.

     ஒருவரின் லக்ன புள்ளி ராகுவின் தொடர்பே இல்லாமல் 100% அமையாது. ராகுவின் உச்ச நீச வீடு, ராகுவுக்கு சாரம் கொடுத்தவரின் உச்ச நீச வீடுகள், ராகுவுக்கு வீடு கொடுத்த வனின் உச்ச நீச வீடுகளில், அல்லது ராகுவிற்கு சாரம் கொடுத்தவனின் வீடு,  ராகுவுக்கு  சாரம் கொடுத்தவனின் வீடு இவையே லக்ன புள்ளி ஆக விழும். சரி பார்த்துக்கொள்ளவும்.

*ராகு முன்னோக்கி செல்பவர் கேது பின்னோக்கி செல்பவர் என்று பார்த்து இருந்தோம். ராகு கேதுவின் சாரம் பெற்றாலோ அல்லது கேது ராகுவின் சாரம் பெற்றாலும் பலன் என்னவா ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எவ்வளவு தூரம் நாம் முன்னோக்கி சென்றாலும் இறுதியில் கேதுவின் பின்னோக்கி இருக்கும் இடத்திற்கே வந்து ஆக வேண்டும். நாம் ஏரிய இடத்தில் இறக்கி விடாமல், அதற்கும் பின்னே சென்று இறக்கி விட்டு மீண்டும் நாம் இருந்த இடத்திற்கு நடக்க வைத்து விடுவார். ராகு கேதுவின் சாரத்தை பெற்றாலும் மிகப்பெரும் அனுபவமே.

* இராகு லக்ன சுபரான 1 5 9 குறியவர்களின் சாரத்தை பெறுவது சிறப்பு. அதேபோல் 1 5 9 மற்றும் ராகு சுபத்துவம் ஆக இருப்பது சிறப்பு. ஏனென்றால் 1 5 9 நமது வம்ச விருத்தியை கூறும்.

* ராகு என்றால் பெருகுதல் எதையும் விருத்தி செய்தல் என்று பொருள். ராகுவின் நட்சத்திரத்தில் சுபகாரியங்கள் மட்டுமே செய்ய வேண்டும். சுப காரியங்கள் செய்தால் அது சுபத்தை பெருக்கும். இராகு நட்சத்திரத்தில் மருத்துவம் பார்க்கக் கூடாது. மீண்டும் மீண்டும் மருத்துவம் பார்க்க செய்துவிடும்.

    ராகுவின் நட்சத்திர பாதங்களில் நின்ற கிரகங்களின் நவாம்ச பாதை தனுசு முதல் மீனம் வரை வருகிறது. அதை எதிர்காலத்தைக் குறிக்கும் ராசிகள். எனவே ராகுவின் நட்சத்திரங்களில் திருமணம் முடிக்கும் பொழுது அடுத்தடுத்த ஜென்மங்களிலும் கணவன் - மனைவி இணைந்தே இருப்பார்கள் என்ற கருத்தில் இணைக்கப்படுகிறது.

* ராகுவின் நட்சத்திரங்களில் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது. கொடுத்தால் வராது என்று கூறுவார்கள். ஒன்று அடுத்த ஜென்மத்தில் வரும். அல்லது ஜாதகருடைய ஜாதக அமைப்பை பொருத்து இந்த ஜென்மம் முடிவுக்குள் பணம் கைக்கு வந்து விடும்.

" பலருக்கு ராகு திசை என்றாலே உச்சத்திற்கு கொண்டு விடும் என்று நினைப்பார்கள். கேது சாரம் பெற்று இருப்பவர்கள் கண்டிப்பாக போக முடியாது. போனாலும் இறங்கிய இடத்திற்கே வந்து விட்டுவிடும் இந்த கேது. கேது ஒரு மரத்தின் வேர் என்றால் ராகு ஒரு மரத்தின் உச்சி. எவ்வளவு பெயர்,  புகழ் கிடைத்தாலும் திசை முடிவில் மிகுந்த பக்குவத்தை கொடுத்து கீழே இறக்கி வைத்து சென்று விடுவார். லக்ன சுபர்களின் சாரத்தை பெற்று அவர்களும் ராகுவும் கெடாமல் பொருள் ஸ்தானங்களில் ஜாதகருக்கு பொருளை தக்க வைப்பது போல் ராகு இருக்க வேண்டும்.

* ராகு என்றாலே போக காரகன். போகத்திற்கு வீரியம் கண்டிப்பாக தேவை. எனவே வீரியத்திற்கு காரகன் ராகு.

* ராகுவின் நட்சத்திரங்கள் காம திரிகோண ராசிகளில் மட்டுமே வரும். எனவே ராகுவின் தன்மை இன்பத்தை பொறுத்தே அமையும். அது உயிர் இன்பமா அல்லது பொருள் இன்பமா என்று பிரித்து பார்க்க வேண்டும்.

* மேஷ லக்னத்திற்கு 3 7 11 க்கு உரியவர். இந்த லக்னத்திற்கு சந்திரன் சுக ஸ்தான அதிபதி. மற்றும் கேந்திர ஆதிபத்திய தோஷ கிரகம். எனவே பலன் சுகம் பெறுவதே இன்பம் என்று கூற வேண்டும். ஆனால் அந்த சுகம் உடல் சுகமா அல்லது நான்காம் இடம் சம்பந்தப்பட்ட பொருள் சுகமா என்று கணித்துக் கூற வேண்டும்.

* ராகு அதிரடிக்கு கட்டுப்படுவார். அதனால்தான் செவ்வாயின் விருச்சிகத்தில் நீசம்.

* ராகுவின் சாரத்தில் சூரியன் அல்லது சந்திரன் இருக்கும் பொழுது, அம்மா வழி மற்றும் அப்பா வழி வம்சவிருத்தி மற்றும் சொந்த பந்தங்கள் அதிகம் உள்ளார்கள் என்று கூற வேண்டும். அதேபோல் அம்மா வழி மற்றும் அப்பா வழி சொத்து பத்துக்கள் அடுத்த தலைமுறைக்கும் வரும் என்று கூற வேண்டும். ராகு சுப தொடர்பில் இருந்தால் நல்வழியிலும்  அது அசுப தொடர்பில் இருந்தால் கெட்ட வழியிலும் பண வரவு உண்டு. ராகுவை வைத்தே பாவ சொத்து புண்ணிய சொத்து என்று பிரித்து பலன் கூறலாம். சூரியன் நேர்மைக்கு உரிய கிரகம். மற்றும் கால புருஷனுக்கு பூர்வபுண்ணிய அதிபதி. சூரியனின் நீச நட்சத்திரம் ராகு.  எனவே பெரும்பாலும் ராகு மறைமுக வழியிலேயே பணத்தை கொடுப்பார். அதனால்தான் ராகு திசை பல பேருக்கு பணவரவை அதிகம் கொட்டும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். ஆனால் அது பொருள் ஸ்தானத்தில் இருந்தால் மட்டுமே கொடுக்கும் உயிர் ஸ்தானத்தில் இருந்தால் கண்டிப்பாக கொடுக்கவே கொடுக்காது. ராகு உயர் ஸ்தானத்தில் இருந்தால் பொருளை முற்பகுதியில் கொடுத்துவிட்டு, பிற்பகுதியில் உயிரைத் தக்க வைத்துக்கொள்வார். பொருளை கண்டிப்பாக கொடுக்கவே மாட்டார். இதை வைத்துதான் ராகு கொடுத்துக் கெடுப்பார் என்று முன்னோர்கள் கூறினார்கள்.
* ராகுவின் சாரத்தில் ஒரு கிரகம் நின்றால் அந்த கிரக காரக பலன் அடுத்த ஜென்மத்தில் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். உதாரணமாக ராகு சுயசாரம் அல்லது சூரியன் ராகு சாரத்தில் இருந்தால், நமது தாத்தா மற்றும் நமது தந்தையார் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் நமக்கு பிறப்பார்கள் என்பதை சொல்லாமல் சொல்லும்.
    ராகு - கேதுவின் சாரத்தில் இருந்தால் தந்தைவழி அல்லது தாய்வழி பாட்டனாருக்கு இரு தாரம் என்று கூற பலன் சரியாக இருக்கும். ஏனென்றால் கேது எதையும் இரண்டாக பிரிப்பவர்.

* நாம் செய்யும் அனைத்து நல்லவை மற்றும் கெட்டவை அனைத்தையுமே தொடர்ந்து கவனித்து வருபவர் ராகுவே. ராகு ஒரு CCTV கேமரா போல் செயல்படுபவர். எதையுமே நிழல் படம் எடுத்து வைக்கும் கிரகம் ராகு. ராகுவிடம் இருந்த பெற்ற அனைத்து தகவல்களையும் கர்மகாரகன் சனி பெற்று கர்மாவை செயல்படுத்துவார். அதனால்தான் இருளிலும் கூட கடவுள் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறார் என்று முன்னோர்கள் கூறுவார்கள். இருளிலும் நிழல் படம் எடுக்கும் கிரகம் ராகுவே.

* ராகுவை வைத்து ஒருவர் திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் அல்லது தொலை தொடர்புகளில் எந்த அளவு பிரகாசிக்கிறார் என்று பலன் கூறலாம்.

* ஒருவருக்கு மேடையில் மிக உயர்ந்த மரியாதை, பெயர், புகழ், செல்வாக்கு அனைத்தையும் கொடுப்பவர் ராகுவே.

* ராகு ஒரு இணைப்பு கிரகம். கால புருஷனுக்கு ஐந்தாம் அதிபதியான சூரியனின் நீச நட்சத்திரம். எனவே மதமாற்றத்திற்கு காரக கிரகம் ராகு. ஒரு மாதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு தன்னை இணைத்து விடுதல். கேதுவும் ஒருவகையில் வருவார் ஏன் என்றால் தன் மதத்தில் இருந்து தன்னை வெட்டி விடுதல் கேது தன்மை.

* ராகுவை விந்து நாதம் என்று ஏற்கனவே கூறினோம். அதேபோல் ராகுவை பெருக்குதல், மற்றும் ஒன்றிற்கு மேற்பட்ட பெருக்குதல் என்ற காரகத்திற்கு உரியவர். ஆணின் விந்தணுவும் பெண்ணின் சினை முட்டையும் சேர்ந்தால் தான் ஒரு உயிர் உருவாகும். எனவே பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? அல்லது இரட்டை குழந்தைகளா என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒரு காரக கிரகம் ராகுவே.

* கேது தூக்கத்திற்கு மற்றும் கனவிற்கு காரகம் என்று ஏற்கனவே பார்த்துவிட்டோம். ராகுவும் ஒரு காரகம் தான். கேது ஏற்கனவே நடந்தவற்றை கூறினார் என்றால், ராகு வரப் போகும் கனவு பலன்கள், மற்றும் பகல் தூக்கத்தை குறிப்பவர். ராகு என்றால் விழிப்பு நிலை. இரவில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவார். எனது பகல் தூக்கம் பகல் கனவு கண்டிப்பாக உண்டு.

* ராகு அசைவ பிரியன். சூரியன் + ராகு, சந்திரன்+ ராகு, அசைவ உணவை உடல் மற்றும் ஆத்மா கேட்கும். ஏன் கேது தொடர்பு பெற்றால் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறுவார்கள். சூரியன்+  கேது,  சந்திரன்+
கேது சைவ உணவு.

* கேது - மெய்ஞானம்,  ராகு -விஞ்ஞானம். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரண கிரகம் ராகு.

* கண்களை மூடிக் கொள்ளுதல் - கேது காரகத்துவம். உதாரணம் ஞானிகள் ரிஷிகள். கண்களை திறந்து வைக்கும் விழிப்பு நிலை. ஆச்சரியமான பார்வைக்கு காரமும் ராகு. இப்பொழுது நாம் மேல்நோக்கி வானத்தைப் பார்க்கும் பொழுது குறிப்பிட்ட டிகிரி மற்றும் தூரம் வரை மட்டுமே பார்க்கிறோம். பார்வையும் தூரமும் விரிவடைந்து செல்வதால் இதற்கு எல்லைகள் கிடையாது. அதனால்தான் ராகுவை முன் நோக்கி செல்லுதல் என்று கூறுகிறோம்.

* ராகு ஒன்றிலிருந்து ஒன்று மாறுதல். ராகுவின் சாரத்தில் நிற்கும் காரக உறவுகள் மற்றும் லக்ன புள்ளி ராகு சாரத்தில் இருந்தால் கவனமாகப் பழகவேண்டும், ராகு இருக்கும் சுப அசுப உயிர் மற்றும் பொருள் தன்மைகளை  பொருத்து. சில பேர் உயிர் தன்மையாக இருப்பார்கள் பழகுவார்கள். சிலபேர் பொருள் தன்மையாக இருப்பார்கள் பொருளுக்காக பழகுவார்கள், கவனம் தேவை.

* ராகு கேள்வி என்றால் கேது பதில். கேள்வி இருக்கும் இடத்தில்தான் ஒரு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் எந்தத் துறை சார்ந்த கண்டுபிடிப்புகளும் அங்கே இருக்கும். கேது - பதில் என்பதால் ஏற்கனவே இந்த பூமியில் பதில் உள்ளது. எனவே இந்த உலகில் தேடுதலே முக்கியம்.

* ராகு மிதுனத்தில் வரும் பொழுது, அதாவது 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவார். அப்பொழுது புதுவித காற்றின் மூலம் பரவும் நோய்களை பரப்புவார். இந்தாண்டு கிரகணம் நிகழ்ந்த தனுசு ராசிக்கு எதிர் மிதுனம் பாதிக்கப்படும். மிதுனம் ராசி, அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளைக் குறிக்கும் அங்கே காற்றின் மூலம் பரவும் நோய்கள் தற்போது தற்போது அதிகமாக இருக்கிறது.

* ராகு / கேது எங்கே ஆசைப்பட வேண்டுமோ அங்கு ஆசைப்பட வேண்டும். கேது இருக்கும் இடத்திற்கு ராகுவின் காரகத்துதிற்கும், ராகு இருக்கும் இடத்திற்கு கேதுவின் காரகத்துவதிற்கும் ஆசைப்படக்கூடாது.

* ராகு -கொடுத்தால் கேது - பிடித்து வைத்து கொள்ளுதல்.
 ராகு - பணம் கொடுத்தால் செல்வந்தன். கேது- பணம் பெற்றுக் கொண்டால் ஆண்டி. ராகு கேதுவின் சாரத்தில் அல்லது கேது ராகுவின் சாரத்தில் அல்லது ராகு கேதுக்கள் சுயசாரம் பெரும்பொழுது, முன்னோர் சொத்துக்கள் இல்லை என்று கூற பல நூறு சதவீதம் துல்லியமாக இருக்கும். ஏனென்றால் இருந்த சொத்துக்கள் எல்லாம் முன்னோர் தலைமுறையுடன் அதாவது தாத்தா,பாட்டி தலைமுறையிடம் முடிந்தது என்று கூற பலன் சரியாக இருக்கும்.

* சிம்மத்தில் ராகு, முன்னோர் சொத்து சுத்தமாக இல்லை.

* சூரியன் - வயிறு ரஜ்ஜூ. சனி - தொடை ரஜ்ஜு. ராகு - பாவங்களை சேர்த்தல். பாவ வழியில் சம்பாதித்த பணத்தை கொண்டு சாப்பிட வயிறை தொடை தாங்கும். அதுவே கர்மா. சனி - கர்மகாரகன்.

* ராகு கேதுக்கள் சுப தொடர்புடன் தனியாக இருக்க வேண்டும். ராகு கேதுக்கள் விஷத் தன்மை உடையதால் அவற்றுடன் சேரும் கிரகங்களுக்கும் பாவங்களை சேர்த்தல்  அல்லது பாவங்களை கழுவுதல் வந்து சேரும்.

* கேது இருக்கும் பாவத்தைக் கெடுப்பார். ராகு இருக்கும் பாவத்தை பெருக்குவார். ராகுதிசையில் ராகுவிற்கு 9 10 அதிபதிகள் சேர தர்மகர்மாதிபதி யோகம். உதாரணமாக மேஷ லக்னத்திற்கு 6 ல் கன்னியில் ராகு. ஒன்பது பத்தாம் அதிபதிகள் என சுக்கிரன் மற்றும் புதன் சேர தர்மகர்மாதிபதி யோகம். இருந்தாலும் சுக்கிரனின் நீச வீட்டில் இருப்பதால் 9 குரிய பாக்கியத்திற்கு பங்கம் .

* ராகுவே குழந்தைகளை தீர்மானிப்பவர். அதேபோல் மனைவியை தீர்மானிப்பவரும் ராகுவே.

* ராகு - லாபம், ஷேர், வட்டித்தொழில், அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்ட தொழில், புகைப்படத் தொழில், அறிவியல் கண்டுபிடிப்பு சார்ந்த தொழில்.

* ராகு - அச்சுப்பதித்தல், ராகுவை வைத்தே ஒருவர் தான் சம்பந்தப்பட்ட துறையில் பெரிய அளவில் முத்திரை குத்துவரா, தடம் பதிப்பாரா என்று எளிதாக கூறலாம்.

* ராகு + புதன் சம்பந்தப்பட - கைரேகை நிபுணர். அல்லது கைரேகை பார்க்க ஜோதிட பலிதம் உண்டு.

* ராகு / கேதுக்கள் சூரியனின் உச்ச பாதையில் இருக்கலாம். அவஸ்தை இல்லாத மரணம். சூரியனின் நீச பாதை என்றால் ஆத்மா நீசம் ஆகிறது என்று பொருள். எனவே ஆத்மா பிரிவிற்கு சிரமம் உள்ளது என்று பொருள்.

* ராகு எதையும் பெருக்குவதால், தன காரகனான குரு மற்றும் பணத்திற்கு காரகனான சுக்கிரன் இவர்களுடன் சேரும் பொழுது பெரும் பணத்தை கண்டிப்பாக தருவார். ராகு+குரு+சுக்கிரன் சேர்க்கை பெரும் பண யோகம்.

* ராகு எட்டாம் அதிபதி மற்றும் லக்னாதிபதி தொடர்பு கூட்டு மரணத்தை சொல்லும். இதில் ஜாதகருக்கு உயிரை கொடுப்பது போல் வந்து விட்டால், கூட்டு மரணத்தில் இருந்து ஜாதகர் தப்பித்து விடுவார். அதற்குப் பதிலாக பெரும் பொருள் விரையம் உண்டு.

* உடலை இயக்க ஆத்மா தேவை. ஆத்மகாரகன் சூரியன் மூலமே ராகு இயங்குகிறார். அதனால்தான் ராகுவை சூரியனின் நிழல் என்கிறோம்.

* சரீரத்தை கொடுப்பவர் தந்தை, சந்திரனின் மூலம் கொடுப்பார். சரீரத்தை இயக்குபவர் ராகு (வீரியம்).

* ராகு - எலும்பு,அஸ்தி அஸ்திவாரம், இவற்றிற்கு காரகன்.  இறப்புக்குப்பின் எலும்பு முழுமையாக எரிந்து சாம்பலாக வேண்டும். அப்படி எரிந்து சாம்பலாக விட்டால், பிரேத சாபம் உண்டு என்று பொருள்.

* ராகு - வீரியம் முகத்திற்கு நேராக பேசுதல். கேது -  வீரியமில்லை, முதுகில் குத்துதல்.

* சூரியனே இப்பூமியில் நமது ஆத்மா தோன்றுவதற்கு காரகம். குழந்தையே இல்லாமல் எவ்வாறு பகவான் குழந்தையை (சூரியன்) கொடுத்தார். ராகு மூலம் (வீரியம் மூலம்)தனது தவ வலிமையால்.

* சூரியன் - கேது (முனிவர்கள், ஆண்டிகள்) தனிமை விரும்பி.
 சூரியன்-ராகு கூட்டத்தை விரும்புதல். அரசன் அரச சபையில் கூட்டத்துடன் இருப்பதையே விரும்புவர். அதாவது ஆத்மா மற்றவர்களுடன் எப்போதும் இருப்பதையே விரும்பும்.

* ராகு / கேது சூட்சுமம், ராகு / கேது சாரத்தின் சூட்சமம்.

- அனைத்துக் கிரகங்களுமே கொடுக்கும். அதில் எது நல்லது எது கெட்டது என்று பிரித்து வாழ வேண்டும்.

Friday, 21 February 2020

நாடி ஜோதிடம் / கிரகமும் முக அமைப்பும்...


முக அமைப்பும் ஜோதிடமும்
---------------------------------------------

 ஜோதிடத்தில் கிரகங்களை உள்வட்ட கிரகங்கள்,வெளிவட்ட கிரகங்கள் என இரண்டு வகைகளாக பிரித்திருக்கிறார்கள்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள கிரகங்களும், சூரியனும் உள்வட்ட கிரகங்களாகும். அவை சூரியன்,புதன்,சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் உள் வட்ட கிரகங்களாகும்.

 பூமிக்கு வெளியே உள்ள செவ்வாய்,குரு,சனி ஆகிய மூன்று கிரகங்களும் வெளிவட்ட கிரகங்களாகும்.

முகத்தில்
கிரகங்கள் நிற்கும் இடங்கள்;
சூரியன் – வலது கண்
சந்திரன்- இடது கண்
செவ்வாய் – புருவம்
புதன் – நெற்றி
குரு – மூக்கு
சுக்கிரன் – கன்னம்
சனி – தாடை 

முகத்தில் உள்ள வெளி உறுப்புகளில் உள்வட்ட கிரகங்கள் குறிக்கும் உறுப்புகள் உள்வாங்கியது போல் முகத்தில் ஒட்டியது போல் தாழ்ந்தும்.

வெளி வட்ட கிரகங்கள் குறிக்கும் உறுப்புகள் வெளியே நீட்டியது போல் உயர்ந்தும் இருப்பதை காணலாம்.

 அதாவது புருவம்,மூக்கு,தாடை மூன்றும் கொஞ்சம் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை காணலாம்.

மூக்கை குறிக்கும் கிரகம் குரு.

 பிருகு-நந்தி நாடி ஜோதிட முறையில் குருவுக்கு ஜீவக்காரகன் என்று பெயர். ஜீவன் என்றால் உயிர், பிராணன் என்று பொருள்படும்.

நாம் ஜீவித்திருப்பதற்கு மூக்கு நாசி வழியாக பிராண வாயுவை சுவாசிப்பதே காரணமாகும். இதனால் ஜீவக்காரகம் பெற்ற குரு முகத்தில் மூக்கை குறிக்கிறார்.

நெற்றியை குறிக்கும் கிரகம் புதனாகும்.
 சூரிய குடும்பத்தில் சூரிய ஓளியை நெரடியாகவும் அதிகமாகவும் பெறும் கிரகம் புதனாகும்.

முகத்தில் அதிகம் சூரிய ஒளி பெறும் உறுப்பு நெற்றியாகும் . இதனால் நெற்றியை குறிக்கும் கிரகம் புதனாகும்.

தாடையை
 குறிக்கும் கிரகம் சனி;

 சூரிய குடும்பத்தில் அதிக சூரிய ஒளியை பெறாமல் இருண்டு கிடக்கும் கிரகம் சனி. முகத்தில் சூரிய ஒளி குறைவாக விழும் உறுப்பு தாடையாகும்.
இதனால் தாடையை குறிக்கும் உறுப்பு சனியாகும்.

முகத்தில் ராஜ கிரகங்கள்
 ஜோதிடத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மற்றும் குரு ஆகிய நான்கு கிரகங்களும் ராஜ கிரகங்கள் எனப்படுகின்றன.

முகத்தில் கண்கள் , புருவம், மூக்கு இவை இல்லை என்றால் முகத்திற்கு அடையாளமே இல்லாமல் போய்விடும்.

 கண்களை குறிக்கும் சூரியன்,சந்திரன், புருவங்களைக்குறிக்கும் செவ்வாய்,

மூக்கை
குறிக்கும் குரு
ஆகிய நான்கு கிரகங்களும் முகத்திற்கு அடையாளம் தரும் ராஜ கிரகங்களாகும்.

 முகத்திற்கு மையமாக அமைந்திருப்பது இந்த உறுப்புகளே.

சனியைப்போல் ராகு செவ்வாயைப்போல் கேது
 ஜோதிடத்தில் சனியைப்போல் ராகு.

 செவ்வாயைப்போல் கேது என ஒரு வாசகம் உண்டு.

 முக அமைப்பும் இதை உறுதி செய்வது போல் அமைந்துள்ளது. அதாவது சனி் கிரகம் குறிக்கும் தாடைக்கு மிக அருகிலேயே ராகு கிரகம் குறிக்கும் வாய் அமைந்துள்ளது.

 நெற்றிக்கும், கண்களுக்கும் நடுவில் வளர்ந்திருக்கும் முடியை செவ்வாய் என எடுத்துக்கொள்ளப்படுகிறது. முடி கேதுவுக்குரியதாகும்.

 இதன் மூலம் சனியைப்போல் ராகு செவ்வாயைப்போல் கேது செயல்படும் என்ற கூற்று உண்மையாகிறது.

சூரியக் குடும்பமும் முக அமைப்பும்
 தலையின் ஒரு அங்கமாக முகம் அமைந்துள்ளது.

 முகத்தில் சிரசைக்குறிப்பது சூரியனாகும். தாடையைக்குறிப்பது சனியாகும்.

ராசிசக்கரத்தில்  சூரியனுடைய வீட்டிற்கு  நேர் எதிரே சனியின் வீடு அமைந்துள்ளது. இதே அமைப்பு முகத்திலும் அமைந்துள்ளது.

அதாவது சூரியனை குறிக்கும் சிரசு முகத்தின் மேல் பகுதியில்  சூரிய வெளிச்சம் அதிகமாக படும் இடத்தில் அமைந்துள்ளது.

 சனியை குறிக்கும் தாடை  முகத்தின் கீழ்ப்பகுதியில் வெளிச்சம் அதிகம் படாத இடத்தில்  அமைந்துள்ளது.

Friday, 7 February 2020

பரிகார ஸ்தலங்கள்


Jothisha Acharya
Kaniprakash M
mkaniprakash@gmail.com
8056245107

12_ராசிக்கு_உண்டான_வழிபாட்டு_தலங்கள் v

இன்னல்களும், தடைகளும் குறைய ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய தெய்வங்களை பற்றி பார்ப்போம்.

#மேஷம் :

ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமைதோறும் வழிபட்டு வர முயற்சியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

#ரிஷபம்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் சுவாமியை வழிபட தடைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

#மிதுனம்

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.

#கடகம்

திருசெந்தூரில் உள்ள மூவர் ஜீவ சாமாதிகளை வழிபட்டு வர நினைத்த காரியம் ஈடேறும்.

#சிம்மம்

தினமும் காலையில் விநாயகரை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

#கன்னி

சித்தர்களையும், குருமார்களையும் வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர மனோதைரியம் மேம்படும்.

#துலாம்

திருவெண்ணைநல்லூரில் உள்ள கிருபாபுரீஸ்வரரை வழிபட்டு வர முன்னோர்களின் ஆசிகளின் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள்.

#விருச்சிகம்

திருமருகலில் உள்ள இரத்தினகிரீசுவரரை வழிபட்டு வர அபிவிருத்தியும், சுபிட்சமும் உண்டாகும்.

#தனுசு

சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட சிந்தனைத் தெளிவு உண்டாகும்.

#மகரம்

துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் ராகு நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் குறையும்.

#கும்பம்

வெள்ளிக்கிழமைதோறும் கருமாரி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர இன்னல்கள் மற்றும் கவலைகள் குறையும்.

#மீனம்

திருவண்ணாமலை, திருக்குரங்கனில் முட்டத்தில் உள்ள வாலீஸ்வரரை வழிபட்டு வர தடைகள் நீங்கி உயர்வும், மேன்மையும் உண்டாகும்.

பழனியில் தைப்பூசம்

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும்.
 மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான போகர் மூலவர் சிலையை நவபாஷாணத்தால் செய்து நிறுவியுள்ளார்.

 இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாகும்.
 ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருகிறார்.
 பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பழனி தைப்பூச விழா முடிந்ததும் ஒருநாளில் அருகில் உள்ள கிராமத்தினர் பழனிமலை வந்து இரவுமுழுவதும் தங்கி ஆடிப் பாடிக் கொண்டாடுகின்றனர்.
தைப்பூசத்துக்குப் பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள்.
 காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
  • அலகு குத்துதல் - நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வருகிறார்கள்.
  • சர்க்கரை காவடி - சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • தீர்த்தக் காவடி - கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • பறவைக் காவடி - அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுகிறார்.
  • பால் காவடி - பால்குடம் காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • மச்சக்காவடி - மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.
  • மயில் காவடி - மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

தைப்பூசம் விரத முறை

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .

 மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . 
மக்கள்
கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

முருகன் தமிழ்க்கடவுள் ஆவார்.முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகன் தேவ சேனாதிபதி (தேவர்களின் சேனாதிபதி) ஆகையால்
இவர் ஒரு போர்க்கடவுள் ஆவார்.

தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே. இக்காரணங்களுக்காகவே சிவன் கோயில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

Thursday, 6 February 2020

Jayalalitha jathakam

YouTube link
https://youtu.be/RHXRyoCYqJ8

Jothisha Acharya
Kaniprakash M
mkaniprakash@gmail.com
8056245107

மேஷ ராசி /YouTube link

YouTube link...
https://youtu.be/NWZngQR0hk8

Jothisha Acharya
Kaniprakash M
8056245107

மேஷம்/ மேஷ ராசியின் காரகங்கள்..



ஜோதிஷ ஆச்சார்யா
Kaniprakash M
mkaniprakash@gmail.com
8056245107


ராசி காரகத்துவம்


மேஷம் என்பது ஒரு சர ராசி இது  நெருப்பு தத்துவம் கொண்ட ராசி இதன்  பலன்கள் என்பது சுயநலம்
பேராசை
எதிலும் மூர்க்கத்தனம் இருக்கும்
கோபம் வேகம் எதிலும் முன்னுரிமை பெறுவதற்குண்டான முயற்சியை மேற்கொள்வார்கள்.

 பிடிவாத குணம் அச்சம் இல்லாமல் செயல்படுவது முட்டாள் தனமான நடவடிக்கைகள்  குறுகிய மனப்பான்மை இருக்கும் காரியத்தில் தடையை சந்தித்து  ஊதாரித்தனம் இருக்கும் ஆதிக்க உணர்வு விவேகமற்ற வேகம் கொடூரமான செயல்கள் இருக்கும் விரக்தியும் வேதனையும் இழப்பும் ஏமாற்றமும் இருக்கும்  சுதந்திரமான சுக  மேன்மை வம்ச விருத்தியின்மை இருக்கும்  வசதிகளுடன் கூடிய விதண்டா வாதங்களை   செய்வார்கள்  நம்பிக்கையுடன் கூடிய கபட தன்மை இருக்கும்.

போக உணர்வில்  நாட்டமின்மை குடும்பத்தில் பற்றின்மை தாய்மையை மதியா  தன்மை தலையில் நோய் மூளையில் வியாதி இல்லறத்தில் ஏமாற்றம் கஷ்டப்பட்டு வாழக் கூடிய அமைப்பு நார்த்தீக  உணர்வு அல்லது நாட்பட்ட இறைவழிபாடும் இருக்கும்  பெரும் பதவிக்காக எதையும் செய்யத்துணிவு இருக்கும் பொண்ணையும் பொருளையும் சுகத்தையும் காத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை இந்த ராசிக்கு உண்டு நெருப்பு தத்துவம்  நிர்வாகத்தில் முதன்மையும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் தகுதியாகும்                                                         மேஷம் அதிபதி செவ்வாய் இதன் உருவம் ஆடு ஒற்றை ராசி  சர ராசி நிறம் சிவப்பு உறுப்பு தலை கடவுள் முருகன்

மலை மற்றும் சிறுகாட்டுப்பகுதி, முட்செடிகள் கரடு முரடான கற்கள் பாறைகள்,வெப்பம் அதிகமாக உள்ள இடம்,போர்க்களம்,ஆட்டு மந்தை, செவ்வாய் ஆட்சி  சூரியன் உச்சம்  சனி நீச்சம்

மேஷத்திற்கு  2. ரிஷபம். ஸ்திர மான பேச்சு உடையவர் இவர்கள். சுக்கிரன் வீடு ஆதலால் இனிமையாக பேசுவார்கள்   லக்னம்  செவ்வாய். 2 சுக்கிரன் ஆகவே செவ்வாய் சுக்கிரன் காரணமாக வாகனம் பெண்கள் பற்றிய பேச்சு இருக்கும். இவருக்கு வருமானம் ஸ்திரமாக இருக்கும். ரிஷபம் பெண். ராசி பெண்கள் மற்றும் கலைத்துறை மூலமும் வருமானம் வரும் 2 ம்பாவத்தில் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது  இது சூரியனின் நட்சத்திரம் எனவே அரசு வழி வருமானம் இருக்கும். ரோகிணி என்றால் உணவு  சம்பந்தபட்ட தொழில் மூலம் விவசாய பொருட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். 2 ம் வீடு சுக்கிரன் வீடு அதனால் பணம் சந்தோஷமான முறையில் வரும்   

மேஷம் தாது ராசி,  கிழக்கு, ஆண்,நெருப்பு, தலை மேஷம் ராசியின் தொழில் அரசு உத்யோகம்  காவல்துறை ராணுவம் தீயணைப்புத்துறை விளையாட்டுத்துறை பொறியியல்துறை செங்கல்சூளை சுரங்கதொழில் அறுவை சிகிச்சை மருத்துவம் ஊர் பஞ்சாயத்து,ஸ்திரம்,தெற்கு, பெண்,நிலம்

மேஷத்திற்கு  3 ஆம் வீடு  மிதுனம். அதிபதி புதன் இது காற்று ராசி இவர்கள் இரட்டை தன்மை கொண்டவர்கள்.

மேஷம் ராசி என்பது காலபுருஷனின் முதல் வீடு வானியலில் இது முதல் ராசி இதன்  ராசியின் அதிபதி செவ்வாய்  செயலில் இது சரமாகவும் தத்துவத்தில் இது அக்னியாகவும் செயல்படும் செயல்களில் இது ஆரம்ப காலத்தையும் பொழுது பருவத்தில் இது  விடியலையும் சர ராசியாகவும் இது உள்ளது ஆண் ராசி நான்கு கால் உடைய ராசி முதல் மாதமான சித்திரை மாதம் துவங்கும் ராசி  உருவத்தில் ஆடாகவும் நிறத்தில் சிகப்பும் இயல்பான நடையும் காடு போன்ற சிறு வனப்பகுதி ஆகவும் மூலத்தில் தாது ராசியாகவும் உள்ளது

மேஷம் காலபுருஷனுக்கு முதல் ராசி. எதிலும் துணிந்த செயல் தலைமை தாங்குதல் மற்றவரை தனக்கு அடிமை  ஆக்குதல் போன்ற குணம் இருக்கும்

மேஷ ராசி   முதல் ராசி என்பதால் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள்

மேஷம் திசை கிழக்கு. இது சர லக்னம் ஒற்றை ஆண் ராசி அதிபதி செவ்வாய் சூரியன் உச்சம் சனி நீச்சம் பெறுகிறார் ராசியின் தன்மை கொடூரம் இடம் புதர் காடு சின்னம் ஆடு. அகன்ற கண்களை உடையவர்கள் நிலையாக இல்லாமல் பயணம் செய்பவர்கள்

லக்னப்புள்ளி அசுவதி  என்றால் கிரிமினல் குணம்.  பரணி  என்றால் சிற்றின்ப பிரியர் கார்த்திகை என்றால் தலைகணம் உடையவர்

நெருப்பு ராசியாதலால் கோபம், ஆணவம் உடையவர்கள். சர ராசியாதலால் சுறு சுறுப்பானவர்கள் ஞானம் அதிகம் உடையவர்கள்

மேஷம் உஷ்ணம்.  தேகம் இருக்கும். மேஷம் தலை ராசி

மேஷம் ஆடு, ஆட்டு குட்டி.  

KP astrology in tamil/ welcome KP Astrology


Friday, 31 January 2020

கிரகங்கள் / planet


வேதம்.. புதன்

வேதம் போதித்தல் குரு

மந்திரம்.. புதன்

தந்திரம்.. ராகு+புதன்

யந்திரம்.. ராகு+புதன்+சூரியன்

தவம்.. கேது

அன்யோன்யம்.. சந்திரன்

விருப்பம்.. சந்திரன்+புதன்

புண்ணியம்.. குரு

பாவம்.. சனி

தண்டனை.. சனி

ஆரோக்கியமான.. சுக்கிரன்

அழகான.. வசீகரம்.. சுக்கிரன்

அழுக்கு.. சனி..

கரி.. சனி..

முயல்... புதன்..

மாமிசம்.. சனி

இயற்கை உணவு.. சந்திரன்+புதன்

வேக வைத்த உணவு.. சந்திரன்+புதன்

நெருப்பில் சமைத்த உணவு.. செவ்வாய்+புதன்+சந்திரன்

Jothisha Acharya
Kaniprakash M
sarajothidam7@gmail.com
8056245107

9th house / welcome KP astrology

9

9-->6 தொடர்பு மூலநோய் வராது.

(மலம் கழிக்கும்போது மலர்ச்சிக்களினால் ஜாதகர் முக்கி மலம் கழிக்கும்போதும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருப்பதாலும், பயணங்கள் அதிகம் செய்பவர்களுக்கும். மன அழுத்தம் உள்ளவர்களுக்கும்.)

 ஆசனவாயில் உள்ள இரண்டு இரத்த குழாய்களும் அழுத்தம் ஏற்ப்பட்டு, வீங்கி, புடைத்து, வளைந்தும் போய் நாளடைவில் இது தடித்து கட்டியாகிவிடும். இந்த கட்டி (அ) முடிச்சுதான் மூலம் எனப்படும்.

4.10 என்பது பொருட்கள் உள்ள இடம்.
3, 9 என்பது பொருட்கள் ஏதும் இல்லாத வெற்றிடம்.
2,8 என்பது எதையும் அடைத்துக்கொள்ளுதல், நெருக்கடி, பயணத்தடை, அழுத்துதல்,

3, 9 இரத்த ஓட்டம், பயணங்கள். இதற்கு 12ம் பாவமான 2, 8 என்பது பயணதடை அதாவது இரத்த ஓட்ட தடையை குறிக்கும்.

(9 -> 8, 12(அ) 9 - -> 2,8,12 (அ) 9 -- 2,8 மற்றும் செவ், கேது-->2,8 இது மூலத்திற்கு பாவ மற்றும் கிரக தொடர்புகள்.)

9ம் பாவம் மட்டும் 2,8,12 தொடர்பு பெற்று,கேது, செவ்வாய் எந்தவிதத்திலும், 2, 8, 12(அ)2, 8 தொடர்பு இல்லை எனில் மூலம் சார்ந்த பிரச்சனை வராது. வந்தாலும் நீண்டகாலம் இல்லாமல் உடனே தீர்வு கிடைத்துவிடும்.

9 -->2, 8, 12 எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை, கேது, செவ்வாய்-->2, 8, 12(அ)2, 8 தொடர்பு பெற்றாலும் மூலம் சார்ந்த பிரச்சனை இல்லை. வந்தாலும் உடனே தீர்வு கிடைத்துவிடும்.

9ம் பாவம், கேது. செவ்வாய் போன்றவை 2,8 (அ) 8ம் பாவத்துடன் ஏந்த வகையிலாவது தொடர்புகொண்டால் மூலம் சார்ந்த பாதிப்புகள் வரும்.

(குறிப்பு)2, 8 தொடர்பு இல்லாமல் 12 மட்டும் தொடர்புகொண்டால் மூலம் சார்ந்த பிரச்சனை வராது.

9,செவ்வாய்--> 3, 9 தொடர்பு பெற்று, 2,8ம் பாவ உப அதிபதி ஒரே கிரகமாகி அது நின்ற நட்(அ) உபநட், 9ம் பாவ தொடர்பு பெற்று,கேது 2, 8 தொடர்பு என்றாலும், செவ்வாய் தசை, கேது புத்தி தொடர்பின் போது தற்காலிகமாக ஆனால் தீவிரமாக மூலம் கண்டிப்பாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

jothisha Acharya
Kaniprakash M
8056245107
mkaniprakash@gmail.com

9ம் பாவம் / #astrology #kp

🔘திரிகோணத்தை முடிவுக்கு கொண்டு வரும் மூன்றாவது புள்ளி தான் 9 ம் பாவம்...

🔘ஒரு பாவம் முழு வளர்ச்சி அடைவது அதனுடைய 9 ம் பாவத்தில் தான்..

🔘 உயிர் உருவான லக்னத்தை அதன் 9 ம் பாவமே மறு உயிரை உருவாக்கும் ஆற்றலை பெறும் நிலையை அடைகிறது...

🔘 பணம் (2) தோன்றிய இரண்டாம் பாவன் அதன் 9 ம் பாவமே ,பணத்தை அதிகாரம் (10) செய்யும் நிலையை அடைகிறது..

🔘  பரிணாமம் அடைந்த ஒரு உயிர் அதன் 9 ம் பாவமான பூரணம் எனும் முழுமைப் பேறு அடையும் போது மட்டுமே அமைதி கொள்கிறது...

🔘 ஓயாத உற்பத்தி செய்து கொள்ளும் 4 ம் பாவம் அதன் 9 ம் பாவமான (12)கட்டாய ஓய்வு கொள்ளும் நிலையை அடைகிறது...

Jothisha Acharya
Kaniprakash M
8056245107
mkaniprakash@gmail.com

4ம் பாவம் - தாய்

YouTube link...

https://youtu.be/jlpc6qgEkxA




ராகு

ராகு - காரகத்துவம் : * ராகுவை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது என்பதால் தான் கேதுவை வைத்து "பாம்பின் கால் பாம்பறியும்" என்றார்...