Friday, 21 February 2020

நாடி ஜோதிடம் / கிரகமும் முக அமைப்பும்...


முக அமைப்பும் ஜோதிடமும்
---------------------------------------------

 ஜோதிடத்தில் கிரகங்களை உள்வட்ட கிரகங்கள்,வெளிவட்ட கிரகங்கள் என இரண்டு வகைகளாக பிரித்திருக்கிறார்கள்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள கிரகங்களும், சூரியனும் உள்வட்ட கிரகங்களாகும். அவை சூரியன்,புதன்,சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் உள் வட்ட கிரகங்களாகும்.

 பூமிக்கு வெளியே உள்ள செவ்வாய்,குரு,சனி ஆகிய மூன்று கிரகங்களும் வெளிவட்ட கிரகங்களாகும்.

முகத்தில்
கிரகங்கள் நிற்கும் இடங்கள்;
சூரியன் – வலது கண்
சந்திரன்- இடது கண்
செவ்வாய் – புருவம்
புதன் – நெற்றி
குரு – மூக்கு
சுக்கிரன் – கன்னம்
சனி – தாடை 

முகத்தில் உள்ள வெளி உறுப்புகளில் உள்வட்ட கிரகங்கள் குறிக்கும் உறுப்புகள் உள்வாங்கியது போல் முகத்தில் ஒட்டியது போல் தாழ்ந்தும்.

வெளி வட்ட கிரகங்கள் குறிக்கும் உறுப்புகள் வெளியே நீட்டியது போல் உயர்ந்தும் இருப்பதை காணலாம்.

 அதாவது புருவம்,மூக்கு,தாடை மூன்றும் கொஞ்சம் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை காணலாம்.

மூக்கை குறிக்கும் கிரகம் குரு.

 பிருகு-நந்தி நாடி ஜோதிட முறையில் குருவுக்கு ஜீவக்காரகன் என்று பெயர். ஜீவன் என்றால் உயிர், பிராணன் என்று பொருள்படும்.

நாம் ஜீவித்திருப்பதற்கு மூக்கு நாசி வழியாக பிராண வாயுவை சுவாசிப்பதே காரணமாகும். இதனால் ஜீவக்காரகம் பெற்ற குரு முகத்தில் மூக்கை குறிக்கிறார்.

நெற்றியை குறிக்கும் கிரகம் புதனாகும்.
 சூரிய குடும்பத்தில் சூரிய ஓளியை நெரடியாகவும் அதிகமாகவும் பெறும் கிரகம் புதனாகும்.

முகத்தில் அதிகம் சூரிய ஒளி பெறும் உறுப்பு நெற்றியாகும் . இதனால் நெற்றியை குறிக்கும் கிரகம் புதனாகும்.

தாடையை
 குறிக்கும் கிரகம் சனி;

 சூரிய குடும்பத்தில் அதிக சூரிய ஒளியை பெறாமல் இருண்டு கிடக்கும் கிரகம் சனி. முகத்தில் சூரிய ஒளி குறைவாக விழும் உறுப்பு தாடையாகும்.
இதனால் தாடையை குறிக்கும் உறுப்பு சனியாகும்.

முகத்தில் ராஜ கிரகங்கள்
 ஜோதிடத்தில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மற்றும் குரு ஆகிய நான்கு கிரகங்களும் ராஜ கிரகங்கள் எனப்படுகின்றன.

முகத்தில் கண்கள் , புருவம், மூக்கு இவை இல்லை என்றால் முகத்திற்கு அடையாளமே இல்லாமல் போய்விடும்.

 கண்களை குறிக்கும் சூரியன்,சந்திரன், புருவங்களைக்குறிக்கும் செவ்வாய்,

மூக்கை
குறிக்கும் குரு
ஆகிய நான்கு கிரகங்களும் முகத்திற்கு அடையாளம் தரும் ராஜ கிரகங்களாகும்.

 முகத்திற்கு மையமாக அமைந்திருப்பது இந்த உறுப்புகளே.

சனியைப்போல் ராகு செவ்வாயைப்போல் கேது
 ஜோதிடத்தில் சனியைப்போல் ராகு.

 செவ்வாயைப்போல் கேது என ஒரு வாசகம் உண்டு.

 முக அமைப்பும் இதை உறுதி செய்வது போல் அமைந்துள்ளது. அதாவது சனி் கிரகம் குறிக்கும் தாடைக்கு மிக அருகிலேயே ராகு கிரகம் குறிக்கும் வாய் அமைந்துள்ளது.

 நெற்றிக்கும், கண்களுக்கும் நடுவில் வளர்ந்திருக்கும் முடியை செவ்வாய் என எடுத்துக்கொள்ளப்படுகிறது. முடி கேதுவுக்குரியதாகும்.

 இதன் மூலம் சனியைப்போல் ராகு செவ்வாயைப்போல் கேது செயல்படும் என்ற கூற்று உண்மையாகிறது.

சூரியக் குடும்பமும் முக அமைப்பும்
 தலையின் ஒரு அங்கமாக முகம் அமைந்துள்ளது.

 முகத்தில் சிரசைக்குறிப்பது சூரியனாகும். தாடையைக்குறிப்பது சனியாகும்.

ராசிசக்கரத்தில்  சூரியனுடைய வீட்டிற்கு  நேர் எதிரே சனியின் வீடு அமைந்துள்ளது. இதே அமைப்பு முகத்திலும் அமைந்துள்ளது.

அதாவது சூரியனை குறிக்கும் சிரசு முகத்தின் மேல் பகுதியில்  சூரிய வெளிச்சம் அதிகமாக படும் இடத்தில் அமைந்துள்ளது.

 சனியை குறிக்கும் தாடை  முகத்தின் கீழ்ப்பகுதியில் வெளிச்சம் அதிகம் படாத இடத்தில்  அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

ராகு

ராகு - காரகத்துவம் : * ராகுவை அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது என்பதால் தான் கேதுவை வைத்து "பாம்பின் கால் பாம்பறியும்" என்றார்...