ஜோதிஷ ஆச்சார்யா
Kaniprakash M
mkaniprakash@gmail.com
8056245107
ராசி காரகத்துவம்
மேஷம் என்பது ஒரு சர ராசி இது நெருப்பு தத்துவம் கொண்ட ராசி இதன் பலன்கள் என்பது சுயநலம்
பேராசை
எதிலும் மூர்க்கத்தனம் இருக்கும்
கோபம் வேகம் எதிலும் முன்னுரிமை பெறுவதற்குண்டான முயற்சியை மேற்கொள்வார்கள்.
பிடிவாத குணம் அச்சம் இல்லாமல் செயல்படுவது முட்டாள் தனமான நடவடிக்கைகள் குறுகிய மனப்பான்மை இருக்கும் காரியத்தில் தடையை சந்தித்து ஊதாரித்தனம் இருக்கும் ஆதிக்க உணர்வு விவேகமற்ற வேகம் கொடூரமான செயல்கள் இருக்கும் விரக்தியும் வேதனையும் இழப்பும் ஏமாற்றமும் இருக்கும் சுதந்திரமான சுக மேன்மை வம்ச விருத்தியின்மை இருக்கும் வசதிகளுடன் கூடிய விதண்டா வாதங்களை செய்வார்கள் நம்பிக்கையுடன் கூடிய கபட தன்மை இருக்கும்.
போக உணர்வில் நாட்டமின்மை குடும்பத்தில் பற்றின்மை தாய்மையை மதியா தன்மை தலையில் நோய் மூளையில் வியாதி இல்லறத்தில் ஏமாற்றம் கஷ்டப்பட்டு வாழக் கூடிய அமைப்பு நார்த்தீக உணர்வு அல்லது நாட்பட்ட இறைவழிபாடும் இருக்கும் பெரும் பதவிக்காக எதையும் செய்யத்துணிவு இருக்கும் பொண்ணையும் பொருளையும் சுகத்தையும் காத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை இந்த ராசிக்கு உண்டு நெருப்பு தத்துவம் நிர்வாகத்தில் முதன்மையும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் தகுதியாகும் மேஷம் அதிபதி செவ்வாய் இதன் உருவம் ஆடு ஒற்றை ராசி சர ராசி நிறம் சிவப்பு உறுப்பு தலை கடவுள் முருகன்
மலை மற்றும் சிறுகாட்டுப்பகுதி, முட்செடிகள் கரடு முரடான கற்கள் பாறைகள்,வெப்பம் அதிகமாக உள்ள இடம்,போர்க்களம்,ஆட்டு மந்தை, செவ்வாய் ஆட்சி சூரியன் உச்சம் சனி நீச்சம்
மேஷத்திற்கு 2. ரிஷபம். ஸ்திர மான பேச்சு உடையவர் இவர்கள். சுக்கிரன் வீடு ஆதலால் இனிமையாக பேசுவார்கள் லக்னம் செவ்வாய். 2 சுக்கிரன் ஆகவே செவ்வாய் சுக்கிரன் காரணமாக வாகனம் பெண்கள் பற்றிய பேச்சு இருக்கும். இவருக்கு வருமானம் ஸ்திரமாக இருக்கும். ரிஷபம் பெண். ராசி பெண்கள் மற்றும் கலைத்துறை மூலமும் வருமானம் வரும் 2 ம்பாவத்தில் கார்த்திகை நட்சத்திரம் உள்ளது இது சூரியனின் நட்சத்திரம் எனவே அரசு வழி வருமானம் இருக்கும். ரோகிணி என்றால் உணவு சம்பந்தபட்ட தொழில் மூலம் விவசாய பொருட்கள் மூலம் வருமானம் கிடைக்கும். 2 ம் வீடு சுக்கிரன் வீடு அதனால் பணம் சந்தோஷமான முறையில் வரும்
மேஷம் தாது ராசி, கிழக்கு, ஆண்,நெருப்பு, தலை மேஷம் ராசியின் தொழில் அரசு உத்யோகம் காவல்துறை ராணுவம் தீயணைப்புத்துறை விளையாட்டுத்துறை பொறியியல்துறை செங்கல்சூளை சுரங்கதொழில் அறுவை சிகிச்சை மருத்துவம் ஊர் பஞ்சாயத்து,ஸ்திரம்,தெற்கு, பெண்,நிலம்
மேஷத்திற்கு 3 ஆம் வீடு மிதுனம். அதிபதி புதன் இது காற்று ராசி இவர்கள் இரட்டை தன்மை கொண்டவர்கள்.
மேஷம் ராசி என்பது காலபுருஷனின் முதல் வீடு வானியலில் இது முதல் ராசி இதன் ராசியின் அதிபதி செவ்வாய் செயலில் இது சரமாகவும் தத்துவத்தில் இது அக்னியாகவும் செயல்படும் செயல்களில் இது ஆரம்ப காலத்தையும் பொழுது பருவத்தில் இது விடியலையும் சர ராசியாகவும் இது உள்ளது ஆண் ராசி நான்கு கால் உடைய ராசி முதல் மாதமான சித்திரை மாதம் துவங்கும் ராசி உருவத்தில் ஆடாகவும் நிறத்தில் சிகப்பும் இயல்பான நடையும் காடு போன்ற சிறு வனப்பகுதி ஆகவும் மூலத்தில் தாது ராசியாகவும் உள்ளது
மேஷம் காலபுருஷனுக்கு முதல் ராசி. எதிலும் துணிந்த செயல் தலைமை தாங்குதல் மற்றவரை தனக்கு அடிமை ஆக்குதல் போன்ற குணம் இருக்கும்
மேஷ ராசி முதல் ராசி என்பதால் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள்
மேஷம் திசை கிழக்கு. இது சர லக்னம் ஒற்றை ஆண் ராசி அதிபதி செவ்வாய் சூரியன் உச்சம் சனி நீச்சம் பெறுகிறார் ராசியின் தன்மை கொடூரம் இடம் புதர் காடு சின்னம் ஆடு. அகன்ற கண்களை உடையவர்கள் நிலையாக இல்லாமல் பயணம் செய்பவர்கள்
லக்னப்புள்ளி அசுவதி என்றால் கிரிமினல் குணம். பரணி என்றால் சிற்றின்ப பிரியர் கார்த்திகை என்றால் தலைகணம் உடையவர்
நெருப்பு ராசியாதலால் கோபம், ஆணவம் உடையவர்கள். சர ராசியாதலால் சுறு சுறுப்பானவர்கள் ஞானம் அதிகம் உடையவர்கள்
மேஷம் உஷ்ணம். தேகம் இருக்கும். மேஷம் தலை ராசி
மேஷம் ஆடு, ஆட்டு குட்டி.
No comments:
Post a Comment